Saturday, January 07, 2006

பல்லவியும் சரணமும் II - பதிவு 2

Popular Demand (கொஞ்சம் பில்டப் வேணுமில்ல!) காரணமாக, 'பல்லவியும் சரணமும்' is back in the NEW YEAR ! இதற்கு ஐகாரஸ் ஒரு முக்கியக் காரணம்! மேலும், சில சீரியஸ் வகை வலைப்பதிவர்களை (ரோசா, ஜெயஸ்ரீ, ஐகாரஸ், ரவி ஸ்ரீனிவாஸ்) என் வலைப்பதிவுக்கு வரவழைக்க வேறொரு மார்க்கமும் என் சிற்றறிவுக்கு புலப்படாததாலும், அவர்களுக்கும் அவ்வப்பொழுது Relaxation தேவை என்பதாலும், இந்த செகண்ட் ரவுண்டை ஆரம்பித்திருக்கிறேன் :-) முன் போலவே, உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்

இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், (முடிந்தால் திரைப்படத்தையும்) கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் ஒரு முறை பின்னூட்டமிடும்போது, 3 அல்லது 4 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு எல்லாவற்றுக்கும் விடை தெரிந்திருந்தாலும் கூட !

ஏனென்றால், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே! 3 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!


1. அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே ...

2 நல்ல பொழுதாய் யாருக்கும் புலரும்....

3. அன்பே உன் அன்னை அறிவே உன் தந்தை ...

4. அங்கம் எங்கெங்கும் ஆனந்த கங்கை ...

5. இது மாறாதென்றான் இனி நீயே என்றான் ...

6. ஆறு குணங்கள் கொண்டவளாம் ஒரு பாவை ...

7. ஆசை வரும் வயது உந்தன் வயது பேசும் இளம் மனது ...

8. நோய் தீர்க்கும் மருந்தினைப் போன்றவை கற்றவர் கூறும் அறிவுரைகள்...

9. காலமகள் பெற்ற மகள் இரவினிலும் மலர்ந்தாள் ...

10. நடை போடு நடை போடு மனமெனும் தேரில் அழகான மயில் போலவே ...

11. தன்னையே தேய்த்துத் தரும் சந்தனம் உந்தன் உள்ளம்...

12. அந்தப்புரம் போனேன் ராணி முகம் பார்த்தேன், அச்சம் கொண்டு...

என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!


என்றென்றும் அன்புடன்
பாலா

20 மறுமொழிகள்:

said...

1. kankal irandum ini enru unnai kaanumO

said...

8. intha pachchai kilikkoru sevvanthi poovil thottilai katti vaiththen

ramachandranusha(உஷா) said...

2. பாடும் போது நான் தென்றல் காற்று

ramachandranusha(உஷா) said...

9. எண்ணிரண்டு பதினாறு வயது

கலை said...

12. கேட்டவரெல்லாம் பாடலாம், என் பாட்டுக்குத் தாளம் போடலாம்.

கலை said...

5. அனுபவம் புதுமை, அவரிடம் கண்டேன்

சுபமூகா said...

6. திருவளர் செல்வியோ

Jsri said...

4. குங்குமப் பொட்டின் மங்கலம்- குடியிருந்த கோயில்

5. அந்தப்புரத்தில் ஒரு மகராணி- -தீபம் (சந்தேகம்)

Jsri said...

7. எங்கிருந்தோஆசைகள்- சந்திரோதயம்

Jsri said...

11. மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம்- அரங்கேற்றம்

paper tough! :((

Jsri said...

உஷா, நீங்களெல்லாம் வந்து பொளந்து கட்டினா நான் என்ன செய்யறது?

மதுமிதா said...
This comment has been removed by a blog administrator.
ramachandranusha(உஷா) said...

ஜெ, சிரிக்காதீங்க. எனக்கு சினிமா பாடல்களின் முதல் இரண்டு வரி மட்டுமே தெரியும். பாட்டுக் கேட்டுக் கொண்டே என்னால் வேலை செய்ய முடியாது. இது குறை என்றால், இதே பிரச்சனையை இன்னொருவரும் பதிவு செய்துள்ளார். வாசன் என்று நினைக்கிறேன் ( இல்லை செல்வராஜ்!).

இந்த சந்திரோதயம் பாடல் "நான் ஏன் இன்று மாறினேன்" வரை வந்துவிட்டு மேலே போகாமல் தலையை பிய்த்துக் கொண்டு, வூட்டுக்காரருக்கு போன் செய்துக் கேட்டால், முதலில் பயந்துப் போனவர், வேற வேலை இல்லையா என்று கடுப்பு அடித்துவிட்டு, போனை வைத்தவர், இப்பொழுது சாப்பிட வரும்பொழுது, "எங்கிருந்தோ ஆசைகள்" என்று பாடிக் கொண்டு வந்தார். சார்,
பழைய பாட்டு மட்டுமே கேட்பார். நடுவில் "வடுமாங்காய், தயிர்சாதம்" கேட்டு எங்கள் எல்லார் இடமும் திட்டு வாங்குவார்.

பாலா சார், சிலசமயம் மெல்ல யோசித்து, ஞாபகம் வருவதற்குள் எல்லாம் போட்டுவிட்டு போயிருப்பார்கள். அதனால் இந்த ஜீ.கே வை
நான் பார்க்கவே மாட்டேன் :-)

Jsri said...

///பாட்டுக் கேட்டுக் கொண்டே என்னால் வேலை செய்ய முடியாது. இது குறை என்றால்,...///

இது குறையா? வரம் உஷா. எனக்கு பாட்டு கேக்கலைன்னா வேலை செய்யவே முடியாது. கரண்ட் கட்டானா அப்படியே செஞ்சுகிட்டிருக்கற வேலையையும் நிறுத்திட்டு சும்மாவே உக்கார்ந்திருப்பேன். அப்பப்ப போனா போறதுன்னு காபி மட்டும் போட்டு சாப்பிடுவேன்.

நேத்தி மும்பை புறநகர்ல 8 மணிநேரம் (9am to 5 pm)கரண்ட் கட். :((((
:)))))

enRenRum-anbudan.BALA said...

மக்களே, சம்ம ஸ்பீடுப்பா நீங்களெல்லாம் :)

பதிவு போட்ட 3 மணி நேரத்திலே, 90% கண்டு பிடிச்சுட்டீங்க !!!!

கலை, சுபமூகா, சந்திரா, ஜெயச்ரி, உஷா, மதுமிதா,

நன்றி, நன்றி, நன்றி !!!!!!!!!!!

மதுமிதா said...

3.ஒரு தாய்மக்கள் நாமென்போம்

enRenRum-anbudan.BALA said...

3-வதற்கான பல்லவி, தவறு, மதுமிதா !!!

மதுமிதா said...

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்?

said...

Budhan yesu gandhi piranthahthu ..

enRenRum-anbudan.BALA said...

madhumitha,

"மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்?" is absolutely RIGHT :) You are a Great Trier, no doubt.

Answer for the saRaNam that no one found out
10. நடை போடு நடை போடு மனமெனும் தேரில் அழகான மயில் போலவே ...

kattAna kattazaku kaNNA, unnaik kANAtha peNNum oru peNNA ?

is the pallavi !!!

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails